இளவரசனாக தனக்கு தானே முடிசூடிக்கொண்ட பிக்கு! - Sri Lanka Muslim

இளவரசனாக தனக்கு தானே முடிசூடிக்கொண்ட பிக்கு!

Contributors

பௌத்த பிக்கு ஒருவர் தான் தியசென் இளவரசன் எனக்கூறி வைபவம் ஒன்றை ஒழுங்கு செய்து, தனக்கு தானே முடிசூடி கொண்டுள்ளார்.

“சாது, சாது” என கோஷங்கள் எழுப்பட்டு மேளங்கள் இசைக்கப்பட்டதுடன், இதற்காக வடிவமைக்கப்பட்டிருந்த விசேட கிரீடம் ஒன்றை சிறப்பு ஆசனம் ஒன்றில் அமர்ந்து தனது தலையில் பிக்கு சூடிக்கொண்டுள்ளார்.

ஆசனத்திற்கு பின்னர் தியசென் தர்மராஜ்ஜியம் என எழுதப்பட்ட பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிக்கு முடிசூடும் போது அருகில் இருந்தவாறு அது குறித்து அறிவித்த நபர், செல்வ செழிப்புடன் கூடிய பொருளாதார வலுவுடன் கூடிய தியசென் தர்மராஜ்ஜியம் அமைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

புத்த பகவான் பரிநிர்வாணமடைந்து 2 ஆயிரத்து 500 வருடங்கள் கழிந்த பின்னர், தியசென் என்ற பெயரில் ஆன்மீக தலைவர் இலங்கையில் தோன்றுவார் எனவும் அவர் தூய்மையான பௌத்த மதத்தை பரப்புவார் என்ற நம்பிக்கை இலங்கை பௌத்த மக்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன், அவர் உலகத்தை வென்று நாட்டுக்கு நன்மைகளை செய்வார் என்றும் ஆசிர்வாத பலத்தை பெறுவார் எனவும் நம்பப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team