இளவரசர் சார்ள்ஸுடன் புகைப்படம் எடுக்கவே 1500 கோடி ரூபா செலவு: ரவி - Sri Lanka Muslim

இளவரசர் சார்ள்ஸுடன் புகைப்படம் எடுக்கவே 1500 கோடி ரூபா செலவு: ரவி

Contributors

பொதுநலவாய மாநாட்டில் சார்ள்ஸ் இளவரசருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொள்வதற்கு ரூபா 1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக, மக்களின் கையிருப்பிலுள்ள பணத்தை பறித்தெடுத்து அதனை தமது சட்டை பையில் போட்டுக்கொள்ளும் வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் இன்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக இதனைத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்ட கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்தப்போவது யார்?, பல கோடி ரூபாய்களை செலவழித்து 81 வெளிநாடுகளுக்கு பயணம் செய்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 26 நாடுகளின் தலைவர்களே மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இம் மாநாட்டுக்காக செலவழித்த பணத்தை பயன்படுத்தி மக்களின் மின் கட்டண குறைப்பையாவது மேற்கொண்டிருக்கலாம். மக்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை. மாறாக சுமைகளே அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தற்போது முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கப்படவில்லை. மாறாக மக்களின் கையிருப்பில் உள்ள பணத்தை பறித்து எடுத்து அரசாங்கத்தின் சட்டை பையினுள் போட்டுக்கொள்ளும் வரவு செலவுத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.vk

Web Design by Srilanka Muslims Web Team