இஸ்ரேலில் 1.4 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்களை காணவில்லை! - Sri Lanka Muslim

இஸ்ரேலில் 1.4 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்களை காணவில்லை!

Contributors

-டெல் அவீவ்-

 2012-ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்திற்கு சொந்தமான 1.4 கோடி டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் திருடு போனதாக தகவல். இஸ்ரேல் ராணுவத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு இதுவரை 55 ஆயுதங்களும், ஆயுத உதிரிபாகங்களும் காணாமல் போயுள்ளன. இவ்வாண்டு நஷ்டமான ஆயுதங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று டெக்னாலஜி அண்ட் லாஜிஸ்டிக்ஸ் இயக்குனரகத்தின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

காணாமல் போகும் ஆயுதங்கள் குற்றவாளிகளின் கரங்களுக்கு செல்வதாகவும் ஹாரெட்ஸ் கூறுகிறது. வடக்கு ஆக்கிரமிப்பு பகுதியில் ஜி.ஐ.எல். டாங்கு ஏவுகணைகளும், ஜூடா பாலைவனப் பகுதியில் நெபி மூஸா பங்கரில் இருந்து ஆயிரக்கணக்கான தோட்டாக்களும் இவ்வாண்டு திருடு போயுள்ளன.

உபகரணங்கள், வெடிகுண்டுகள், இரும்பு, ஜெனரேட்டுகள் முதல் வாகனங்கள் வரை திருடு போகின்றனவாம்.

திருடு போகும் இடங்களில் காவலில் உள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உதவியுடனே இவை திருடு போவதாக மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறுகிறார்.(thoo)

 

Web Design by Srilanka Muslims Web Team