‘இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை’ - Sri Lanka Muslim

‘இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை’

Contributors

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவன் மாளிகைக்காடு தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய “இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை” எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அரங்கில், நேறறு (05) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு, கிழக்கு இளைஞா்கள் அமைப்பின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். தெளபீக் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், பேராசிரியர் எம்.ஜ.எம். கலீல், கலாநிதி எஸ்.எம்.ஜயூப், அரசியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பெளஸர், இக்றா நிறுவன பணிப்பாளா் யூ.சத்தார், விரிவுரையாளர் என்.லும்னா ஷாபி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நூலனது நடைமுறைக்கு சாத்தியமான பல்வேறு விடயங்களை விமர்சன ரீதியாக நோக்கப்பட்டிருப்பதுடன், பிரதான 08 தலைப்புக்களை மையமாக வைத்து 68 பக்கங்களைக் கொண்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team