இஸ்லாமிய எழுச்சியே அடுத்த இலக்கு -வபா பாறுக்கின் நேர்காணல் » Sri Lanka Muslim

இஸ்லாமிய எழுச்சியே அடுத்த இலக்கு -வபா பாறுக்கின் நேர்காணல்

wafa66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிழக்கின் எழுச்சி என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனூடாக ஒரு வருட காலமாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக்காரணமாயிருந்த அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான கலந்துரையாடலை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்து தருகிறோம்.

கேள்வி:
கடந்த ஒரு வருட காலமாக கிழக்கின் எழுச்சியென்ற அமைப்பினூடாக சமூகத்துக்கு உங்கள் கருத்துக்களை பரிமாறி வந்தீர்கள்.
அண்மைக்காலமாக கிழக்கின் எழுச்சியூடாக கருத்துக்கள் பரிமாரப்படுவதை அவதானிக்க முடியவில்லை. என்ன காரணம்?

பதில்:
கிழக்கின் எழுச்சி என்பது அக்கால அரசியல் விழிப்பூட்டலுக்கான அடையாளப் பெயரேயன்றி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பல்ல.
சமூக விழிப்பூட்டலுக்காக பகிரப்பட்ட சிந்தனைக்கருத்துக்களில் கவரப்பட்டவர்கள் சில சகோதரர்களையும் இணைத்துக்கொண்ட ஒரு விழிப்பூட்டல் பணியே அது.
மேலும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அவசர அரசியல் எழுச்சியை ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாட்டின் காரணமாக அக்கோசத்துக்கு கிழக்கின் எழுச்சியென பெயரிட்டோம்.

கிழக்கில் எதிர்பார்த்த அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறோம்.
என்றாலும் கிழக்கின் எழுச்சியிலிருக்கும் மற்றய சகோதரர்கள் தமது சிந்தனைகளை கிழக்கின் எழுச்சியினூடாக தொடர்ந்து முன்னெடுத்து செல்லலாம்.
அது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பில்லை என்பதால் விரும்பியவர்கள் தங்கள் சிந்தனைகளை பகிரும் ஊடகமாக கிழக்கின் எழுச்சியை பயன் படுத்தலாம்.

கேள்வி:
அப்படியாயின் தங்களது அரசியல் செயற்பாடுகளின் புதிய தளமாகவும் அடையாளமாகவும் எது இருக்கும்?

பதில்:
என்றும் இருந்ததுபோல் எனது சொந்தப்பெயரேயிருக்கும்.
இடையில் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிய நாடி எமது தலைமைத்துவ சபை மாதிரி யாப்பை உள்வாங்கி அக்கட்சியின் தவிசாளராக செயல்பட விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அக்கட்சிப் பதிவுக்கான முயற்சிகளை செய்தோம்.
ஒரு சிறிய காரனத்தினால் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

அதனால் சிந்தனைப் பகிர்வுகளில் தடங்கல் நிகழாதவண்ணம் தனிப்பட்ட பெயரில் தொடர்ந்தும்பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
அமைப்பு, கட்சிகளூடான அடையாளங்களை கவனத்தில் கொள்ளும் பலயீனத்திலிருந்து சமூகத்தை விடுவிக்க முயலும் நமக்கு, நேர்த்தியான சிந்தனைகள்தான் அடையாளமாக இருக்கவேண்டும் என்பதும் என்னுடைய நிலைப்பாடுமாகும்.

கேள்வி:
என்றாலும் உங்கள் சிந்தனைகளைப் பகிர்வதற்கு ஒரு அடையாளம் இன்னும் உதவியாய் இருக்குமல்லவா?

பதில்: நிட்சயமாக, உதவியாகத்தான் இருக்கும்.
கிழக்கு முஸ்லிம்களை அரசியல் ஏமாற்றத்திலிருந்து விடிவிக்க கிழக்கின் எழுச்சி என்ற அடையாளத்தில் இயங்கினோம்.
அதில் வெற்றியும் கண்டோம்.
தற்போதைய தேவை முழு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை மேலோங்கச் செய்யக்கூடிய சிந்தனைக்கான அடையாளமே. அத்தகையதொரு அடையாளத்தை விரைவில் வெளிப்படுத்தி அடுத்த கட்ட நகர்வையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம் இன்ஷா அழ்ழாஹ்.
ஆரம்பமிருந்து இன்றுவரை இஸ்லாமிய சிந்தனை கொண்ட தலைமையை உருவாக்குவதே இலக்காய் இருக்கின்றது. அதன் முதற்கட்டம் கிழக்கின் எழுச்சி என்ற பெயருடன் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த கட்டத்தை பொருத்தமான பெயருடன் முன்னெடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி:
கிழக்கின் எழுச்சியில் உங்களுடன் இருந்தவர்களும் அடுத்த கட்ட நகர்விலும் உங்களுடன் இணைந்திருப்பார்களா?

பதில்:
அது அவர்களின் விருப்பை பொறுத்தது.
இஸ்லாமிய சிந்தனையற்ற எவரையும் அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டுடன் இணங்கினால் இணைந்து கொள்வார்கள்.

கேள்வி:
அப்படியாயின் பரவலாக இன்று பேசப்படும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

பதில்:
ஆதரிப்பதா இல்லையா என்பதை அது உருவாக்கப்பட்டதன் பின் அதன் கட்டமைப்பு, கொள்கை, இலக்குகளை அறிந்த பின்னரே தீர்மானிக்க முடியும்.
இஸ்லாமிய சிந்தனையுள்ள அமீரைக்கொண்ட தலைமைத்துவ சபையுடைய முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பையே அன்று நாம் உருவாக்க முயன்றோம். அதற்கு என்றும் ஆதரவளிப்போம்.
இஸ்லாமிய சிந்தனை, வழிமுறைகள் இல்லாத எந்த மாற்றத்தையும் ஒரு சிறந்த மாற்றமாகவே கருதவில்லை.

கேள்வி:
எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கின் எழுச்சி போட்டியிடும் என்று முன்பொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தீர்கள் அல்லவா?

பதில்:
ஆம்,
இபோதும் கிழக்கின் எழுச்சியில் இருக்கும் சகோதரர்கள் அவ்விடையத்தை பரீசீலித்து இந்த சூழலுக்கேற்ற முடிவை எடுக்கலாம்.

கேள்வி:
உங்களது அடுத்த கட்ட நகர்வை என்ன பெயர்கொண்டு அடையாளப்படுத்தவுள்ளீர்கள்?
பதில்:
இன்னும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு வாரத்துக்குள் வெளிப்படுத்துவோம் இன்ஷா அழ்ழாஹ்

Web Design by The Design Lanka