இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க சவுதி அரசு தீர்மானம் - Sri Lanka Muslim

இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க சவுதி அரசு தீர்மானம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


ஆங்கில நாள்காட்டியின்படி, பிப்ரவரி நீங்கலாக இதர 11 மாதங்களும், 30 அல்லது 31 நாட்களை கொண்டுள்ளன. ஆனால், 12 மாதங்களை கொண்ட இஸ்லாமிய நாள்காட்டியின்படி, முதல்பிறை தென்பட்ட நாளின்பிற்கு பிறக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 29 அல்லது 30 நாட்களே உள்ளன.

எனவே, அதிகமான வேலை நாட்களை கொண்ட ஆங்கில நாள்காட்டியின்படி அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானித்துள்ள சவுதி அரேபியா இந்த புதியநடைமுறையை நேற்று முன்தினத்தில் (அக்டோபர் முதல்தேதி) இருந்து நடைமுறைப்படுத்தியுள்ளதாக சவுதி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team