இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 13 வது எந்திரனியல் பட்டறை (Photo) - Sri Lanka Muslim

இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 13 வது எந்திரனியல் பட்டறை (Photo)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-Rudane Zahir-

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நிந்தவூர் கிளை uplift Education அமைப்போடு இணைந்து நடாத்திய குறிமுறையாக்கல்,எந்திரனியல் பட்டறை ( Coding and Robotics )கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.இம்தாத் தலைமையில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

35 மாணவர்கள் கலந்துகொண்ட இப் பட்டறையில் வளவாளர்களாக மொறட்டுவ பொறியியல் பீட மாணவர்கள் உட்பட Uplift Education இலங்கை குழுவின் தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.சப்வான் ஆகியோர் மாணவர்களை பயிற்றுவித்தனர்.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.யூ.எம்.சலீம் அவர்களும் கெளரவ அதிதியாக பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபிர் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

அசுர வேகத்தில் முன்னேறிவரும் தொழில்நுட்ப உலகு ஒரு நூற்றாண்டில் காணவேண்டிய விந்தைகளையும் மாற்றங்களையும் ஒருசில வருடங்களுக்குள்ளேயே எட்டிப்பிடித்து புதுமைகள் பல புரிகின்றநிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது கல்விக்கட்டமைப்பில் முன்பள்ளிகளிலேயே எந்திரனியல் மற்றும் குறிமுறையாக்கல் தொழில்நுட்பக்கல்வியை உட்புகுத்தி மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்கின்றார்கள்.

அந்த வகையில் இலங்கை மாணவர்களுக்கு மத்தியில் இப்பயிற்சி நெறியை நடாத்தி உள்ளூர் மாணவர்களை சர்வேதச தரத்துக்கு உயர்த்தும் பொருட்டு நாடுதழுவியரீதியில் 13 பயிற்ச்சி பட்டறைகளை நடாத்தயுள்ள uplift Education அமைப்பு இதுவரை சுமார் 400 க்கு மேற்பட்ட மாணவர்களை இத்துறையில் பயிற்றுவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

b21dcf0d-aa17-4ed6-a687-0a8f7fbe99c1 bbhbh  kmkm mn njnj

mm

Web Design by Srilanka Muslims Web Team