இஸ்லாம் பாடப் புத்தக விவகாரம் - நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் முஸ்லிம் எம்.பிக்களுடன் சந்திப்பு! - Sri Lanka Muslim

இஸ்லாம் பாடப் புத்தக விவகாரம் – நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் முஸ்லிம் எம்.பிக்களுடன் சந்திப்பு!

Contributors

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகம் மீள் விநிேயாகம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் ஆகியோரை
நேற்று (30) கல்முனை மாநகர முதல்வர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகங்களை மீள விநிேயாகிக்க, அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம், நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பில், நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் தொழிலதிபர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team