ஈராக்கிலிருந்து சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் - Sri Lanka Muslim

ஈராக்கிலிருந்து சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்

Contributors

சவுதி அரேபியாவின்; வடகிழக்கு அரார் எல்லைப் பகுதிக்கு ஈராக்கில் இருந்து பல எறிகணைகள் விழுந்துள்ளன.

 

 

“வடகிழக்கு எல்லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்கு அருகில் மூன்று எறிகணை தாக்குதல்கள் இடபெற்றுள்ளன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்று சவூதி எல்லைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்த எறிகணை தாக்குதல் குறித்து சவூதி அரேபியா உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈராக்கில் ஐசிஸ் எனப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையினர் நாட்டின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு யுத்த பதற்றம் நீடித்து வருகிறது. ஐசிஸ் போராளிகளுக்கு சவூதி உதவுவதாக ஈராக் பிரதமர்; நூரி அல் மலிக்கி கடந்த மாதம் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

கடந்த மூன்று தினங்களுக்குள் சவூதி எல்லையில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக சவு+தியின் தெற்கு எல்லையான அல் ‘வ்ரூரா மீது யெமனை மையமாகக் கொண்ட அல் கொய்தா ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

 

 

ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் பாரிய முன்னேற்றம் கண்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சவூதிமன்னர் அப்துல்லாஹ் கடந்த வாரம் உத்தரவிட்டி ருந்தார்.

 

 

அத்துடன் ஈராக் எல் லைக்கு 30,000 துருப்புகளையும் சவூதி அனுப்பியது.

 

Web Design by Srilanka Muslims Web Team