ஈரானில் தீவிரமடையும் போராட்டம் - 41இற்கும் மேற்பட்டோர் பலி! - Sri Lanka Muslim

ஈரானில் தீவிரமடையும் போராட்டம் – 41இற்கும் மேற்பட்டோர் பலி!

Contributors

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார்.

இளம் பெண் ஒருவர் போலீசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்துவருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அதிபர் ரைசி, வழக்கமான போராட்டங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கலவரங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஈரானில் வன்முறையில் ஈடுபட்டதாக 60 பெண்கள் உள்பட 700இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team