ஈஸ்டர் தாக்குதல்; காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல்; காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Contributors

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்  தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும்  எதிர்வரும் 21ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டார்

இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில்,  இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக  அழைத்துவரப்படாத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை பாதுகாப்புடன்  அழைத்துவரப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 51 பேரையும் எதிர்வரும் 21ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team