ஈஸ்டர் தாக்குதல்; மன்னிப்பு கூறினார் மைத்திரி - ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்க தீர்மானம்! - Sri Lanka Muslim

ஈஸ்டர் தாக்குதல்; மன்னிப்பு கூறினார் மைத்திரி – ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்க தீர்மானம்!

Contributors

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தான் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (31) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்  போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் 2019ம் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும்  இதன்போது கேட்டுகொண்டுள்ளார்.

 

“நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team