உதுமாலெப்பையின் 2 புதல்வர்கள் பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பங்கேற்பு - Sri Lanka Muslim

உதுமாலெப்பையின் 2 புதல்வர்கள் பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பங்கேற்பு

Contributors

 

(ஏ.எல்.ஜனூவர்)

ஹம்மாந்தோட்டை சர்வேதச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான பொதுநலவாய மாநாட்டுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மூத்த புதல்வரும், இரண்டாவது புதல்வரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சம்மேளனத் தலைவரும், அம்பாரை மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவருமான மூத்த புதல்வர் யூ.எல்.எம்.சர்ஜுன் மாவட்ட இளைஞர் சம்மேளனம் சார்பாக இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர் பாராளுமன்ற பிரதி சபாநாயகருமான இரண்டாவது புதல்வர் யூ.எல்.எம்.சபீர் இளைஞர் பாராளுமன்றத்தின் சார்பாக இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team