உம்ராவிலிருந்து திரும்பும் வழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04பேர் விபத்தில் வபாத் - Sri Lanka Muslim

உம்ராவிலிருந்து திரும்பும் வழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04பேர் விபத்தில் வபாத்

Contributors

சவூதி தலைநகர் ரியாத் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக வபாத்தானார்கள்.

 

மக்காவிற்கு புனிதப் பயணம் ‘உம்ரா’ மேற்கொண்டு விட்டு திங்கள் கிழமை காலை, காரில் ரியாத் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்த போது முஜம்மியா என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் அந்த வாகனத்தில் பயணித்தனர்.

 

படுகாயமுற்ற மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட தூர பயணம் என்பதால் வாகனம் ஓட்டும் போது மயக்கம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

எனினும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team