உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் 12 பேர் பலி - Sri Lanka Muslim

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் 12 பேர் பலி

Contributors

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் 12 பேர் பலியாகியுள்ளானர்.

பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின், தகுதிச்சுற்று தெரிவில் அல்ஜீரியா அணியினர், பர்கினா பாசோ அணியை வெற்று தகுதி பெற்றனர்.

இந்த மகிழ்ச்சியை அல்ஜீரிய கால்பந்தாட ரசிகர்கள் நாடெங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் அல்ஜியர்சின் கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பிரதேச நகரமான பெஜாரியாவிலிருந்து ஐந்து ரசிகர்களுடன் சென்ற வேன் ஒன்று நீர் வழிந்தோடும் இடுக்கில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அனைவரும் பலியாகினர். இதேபோன்று மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் நான்குபேர், அல்ஜீரியாவின் தென்பகுதி நகரமான பிஸ்க்ராவில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியானார்கள். மேலும் மூன்று பேர் தனிப்பட்ட சம்பவங்களில் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இரவு முழுவதும் நடைபெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் சுமார் 240 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் அல்ஜீரிய கால்பந்து அணி சென்ற பேருந்து தாக்கப்பட்டதும் நினைவு கூறத்தக்கது.

தற்போது அல்ஜீரியா அணி நான்காவது முறை உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

algeeriya12

 

algeeriya4

 

Fans of Algeria's soccer team hold the country's national flag as they celebrate in downtown Algiers

Web Design by Srilanka Muslims Web Team