உலகம் சுற்றும் பிரதமர் மன்மோகன் சிங் - Sri Lanka Muslim
Contributors

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயணங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
முக்கியமான பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டார் எனவும், சுற்றுப்பயணங்களுக்காக அதிக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பிரதமர் மீது வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லாத நாடுகள் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் பிரேசில் தவிர மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமே.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த 2004ம் ஆண்டிலிருந்து இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை ரூபாய் 642.45 கோடி.

ஐ.மு., கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் 37 முறை பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் 15 பயணங்களின் போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.

இரண்டாவது முறை ஆட்சியின் போது 2009லிருந்து 35 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் 13 பயணங்கள் கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்பட்டது.

2ஜி, காமன்வெல்த், நிலக்கரி என அடுக்கடுக்கான ஊழல்களை கண்டுகொள்ளாத பிரதமரின் இந்த செயலும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அடுத்தாண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமரின் இந்த செயலாலும், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

2009ம் ஆண்டிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட முக்கிய வெளிநாட்டு பயணத்தின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் டிரினிடாட் அண்டு டெபாகோ
2009, நவ.21-28
செலவு ரூ.21,27,41,000

அமெரிக்கா மற்றும் பிரேசில்
2010, ஏப்.10-17
செலவு ரூ.22,70,33,000

டென்மார்க்
2009, டிச.17,18
செலவு ரூ.10,69,28,000

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
2013, செப்.4-7
செலவு கிடைக்கவில்லை

மாஸ்கோ
2011, டிச.15-17
செலவு ரூ.8,61,24,000

தென்கொரியா
2012, மார்ச் 23-27
செலவு ரூ.10,47,03,000

நியூயார்க்
2013, செப்.25-அக்.1
செலவு கிடைக்கவில்லை

இத்தாலி
2009, ஜூலை 7-10
செலவு ரூ.14,56,86,000

மாஸ்கோ
2009, டிச.6-8
செலவு ரூ.7,86,85,000

தென்கொரியா
2010, நவ.10-12
செலவு ரூ.11,85,23,000

சீனா மற்றும் கசகஸ்தான்
2011, ஏப்.12-16
செலவு ரூ.12,35,99,000

பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி
2010, டிச.9-12
செலவு ரூ.14,56,65,000

பிரான்ஸ் மற்றும் எகிப்து
2009, ஜூலை 13-16
செலவு ரூ.11,20,57,000

பூடான்
2010, ஏப்.28-30
செலவு கிடைக்கவில்லை

வங்கதேசம்
2011, செப்.6,7
செலவு ரூ.7,56,94,000

கம்போடியா
2012, நவ.18-20
செலவு கிடைக்கவில்லை

ஆப்கானிஸ்தான்
2011, மே 12,13
செலவு கிடைக்கவில்லை

சவுதி அரேபியா
2010, பிப்.27-மார்ச் 1
செலவு ரூ.11,41,30,000

டெஹ்ரான்
2012, ஆக.28-31
செலவு ரூ.9,80,67,000

மியான்மர்
2012, மே 27-29
செலவு ரூ.8,36,19,000

Web Design by Srilanka Muslims Web Team