உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 60ம் இடம் - Sri Lanka Muslim

உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 60ம் இடம்

Contributors

உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 60ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுபீட்ச சுட்டெண் தொடர்பிலான கணிப்பீடு 142 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லகடான் நிறுவனம் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.

தலா தேசிய வருமானம், மொத்த தேசிய சேமிப்பு, தொழில்வாய்ப்பு, உணவு இருப்பிட வசதி போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சுபீட்சம் தொடர்பிலான கணிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.

உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், கனடா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன. இந்தியா 106ம் இடத்தையும், நேபாளம் 102ம் இடத்தையும், பங்களாதேஷ் 103 இடத்தையும் வகிக்கின்றது. gtn

Web Design by Srilanka Muslims Web Team