உலகின் செலவுமிக்க நகரம் எது தெரியுமா? - நம்பவே முடியாத ஆச்சரியம். - Sri Lanka Muslim

உலகின் செலவுமிக்க நகரம் எது தெரியுமா? – நம்பவே முடியாத ஆச்சரியம்.

Contributors

உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூயோர்க்? மொஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மொஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டொலர் (மாதாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டொலர் கொடுத்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை கிடைத்துவிடும்.

லுவாண்டாவில் அதற்கு ஆறாயிரத்தி முன்னூறு டொலர் கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு 8 டொலர். சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று ஆரம்பித்து சகட்டு மேனிக்கு எல்லாவற்றுக்கும் மற்ற ஊர்களின் விலை விவரங்களைக் காட்டிலும் குறைந்தது ஐந்து மடங்கு அதிகம். இதிலேயே இன்னும் கொஞ்சம் பணக்காரத்தனம் தேவையென்றால் இன்னும் எடு, இன்னும் கொடு, அள்ளி வீசு! வரவர லுவாண்டா படு பயங்கர பணக்காரர்களின் க்ஷேத்திரமாக மாறிக்கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அங்கோலாவாசிகள்.

Web Design by Srilanka Muslims Web Team