உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3வது இடம் - Sri Lanka Muslim

உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3வது இடம்

Contributors

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகிலேயே அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உலக அளவில் 21 வது இடம் பிடித்துள்ளார்.
மொத்தமுள்ள 72 அரசியல் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் வரிசையில் சோனியா மூன்றாம் இடம் வகிக்கிறார்.

அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் சோனியாவுடன் ஒப்பிடும் போது, பிரதமர் மன்மோகன் சிங் ஏழு இடங்கள் பின்தங்கி 28 வது இடத்தில் உள்ளார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உலகில் அதிகாரம் படைத்தவர்களில் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் சீன குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங், ஆறாவது இடத்தில் பில்கேட்ஸ் ஆகியோர் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team