உலக மக்களுக்கு மன்னர் சல்மான் பிரகடனம்.....!! - Sri Lanka Muslim

உலக மக்களுக்கு மன்னர் சல்மான் பிரகடனம்…..!!

Contributors
author image

Editorial Team

அரசன், ஆண்டி வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை : இளவரசரின் மரண தண்டனை குறித்து உலக மக்களுக்கு சல்மான் பிரகடனம்…..!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் இளவரசரின் மரண தண்டனை குறித்து அரசன் ஆண்டி வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை என்று உலக மக்களுக்கு பிரகடனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆற்றிய உரையில்…
என்னுடைய ஆட்சி இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் ஆட்சி,

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு கிடையாது. என்னுடைய ஆட்சியில் அரசனும், ஆண்டியும் சம நீதியுடன் நடத்தப்படுவார்கள்.

இந்நாட்டின் அதிகார பீடத்தில் உள்ளவர்கள் தவறிழைத்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் நெஞ்சுறுதி மக்களுக்கு வர வேண்டும்.

மன்னராகிய நான் தவறு இழைத்தாலும் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் மனப்பக்குவத்தை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சட்டத்தை பொறுத்தவரை ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி என்ற பாகுபாடுகள் இல்லை. இஸ்லாமிய சட்டத்தை எனது ஆட்சி செயல்படுத்தி உள்ளது.

மேற்கண்டவாறு மன்னர் சல்மான் கூறினார்.
நன்றி : மௌலவி செய்யது அலி ஃபைஜி

Web Design by Srilanka Muslims Web Team