உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்பு - Sri Lanka Muslim

உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்பு

Contributors

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
இந்தோனோசியாவின் பாலியில் இடம் பெறும் ஜெனீவாவினை தலைமையகமாக கொண்டு இயங்கும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்கின்றார்.இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று(2013-12-02) இந்தோனோசியாவுக்கு பயணமானார்.

உலக வர்த்தக அமைப்பினால் இடம் பெறும் இம்மாநாடானது மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.159 நாடுகள் 2013 ஆண்டின் அதனது உறுப்புரிமையினை பெற்றுள்ளது.அதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது.

சர்வதேச வர்த்தக செயற்பாடுகளுடன் கூடிய பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்கள் இந்த மாநாட்டில் எடுக்கப்படவுள்ளது.இம்மாதம் 6 ஆம் திகதி வரை இடம் பெறும் இந்த மாநாட்டின் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை மீளாய்வு செய்தல்இமற்றும் வர்த்தக துறை மேம்பாட்டுக்கான திட்டங்கள் முன்மொழிதல் என்பன இங்கு பிரதான அம்சமாகும்.

அதே வேளை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரான்ஸ்இகட்டார்இசவூதி அரேபியாஇஇந்தோனோசியா உள்ளிட்ட முன்னனி நாடுகளின் வர்த்தக அமைச்சர்களையும்இஅமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்து இலங்கை முதலீடு தொடர்பில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team