உலோகத்தால் ஆன சாம்சங் கேலக்ஸி S5 அடுத்த வருடம் அறிமுகம். - Sri Lanka Muslim

உலோகத்தால் ஆன சாம்சங் கேலக்ஸி S5 அடுத்த வருடம் அறிமுகம்.

Contributors

மொபைல் உலகின் ஜாம்பவனாக இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங், தங்களது சாம்சங் கேலக்ஸி  ஸ்மார்ட்போன் S4 மற்றும் S5 வெற்றியை அடுத்து 2014 ஆம் ஆண்டில் உலோகத்தால் ஆன புதிய கேலக்ஸி S5 மாடல் ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. பாலிகார்பனேட் எனப்படும் வளையும் தன்மை கொண்ட இவ்வகை மாடல் போன்கள் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்பதில் ஐயமில்லை.

இந்த ஆண்டில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி S4 தரம் குறித்த விமர்சனங்களால் நெருக்கடிக்கு ஆளானது. பெரும்பாலும் ஆப்பிள் ஐபோனுடன் தான் சாம்சங் ஒப்பீடு செய்யப்படுகிறது.  எனவே இந்நிறுவனம், தங்களது தர உயர்வை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஒரு மாற்றத்திற்காக சாம்சங் வெளியிட்ட லெதர் வடிவிலான கேலக்ஸி நோட் 3 மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததையொட்டி, கேலக்ஸி S5 மாடலில் புதிய வகை உலோகத்தில் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் தரும் ஒப்பந்தகாரர்கள் அந்நிறுவனத்திடம் இருந்து புதிய வகையான ஸ்மார்ட்போன்களை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களை திருப்திபடுத்தவே சாம்சங், தனது உலோக வடிவிலான ஸ்மார்ட்போனுக்கு தற்போது இறுதிவடிவம் கொடுத்து வருகிறது. அடுத்த வருடம் இரண்டாம் காலிறுதியில் புதிய உலோக ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தும் என நம்பலாம்.

கேட்சர் என்ற ஒப்பந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வரும் ஆண்டில் சுமார் 10 மில்லியன் முதல் 30 மில்லியன் வரை ஸ்மார்ட்போன்கள் வர்த்தகம் செய்யும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். சாம்சங் நிர்ணயிக்கும் விலையை பொறுத்தே வர்த்தகத்தின் மதிப்பு உயரும் அல்லது குறையும் என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 5S மாடலில் உள்ள 64 பிட் பிராஸஸர் போன்றே கேலக்ஸி S5 மாடலிலும் அமையும் என அந்நிறுவனத்தலைவர் ஷிங் ஜாங் க்யூன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கேலக்ஸி S5 மாடல் போனின் தொழில்நுட்பங்கள் குறித்து முழுமையாக கூறமுடியாமல் போனாலும், கிழே வரும் ஸ்லைடர்களில் ஓரளவிற்கு பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளோம்.

பிராஸசர்:

ஆப்பிள் ஐபோன் 5S மாடலில் உள்ள 64 பிட் பிராஸசர் கேலக்ஸி S5 மாடலில் அமைக்கப்பட்டுள்ளதாக கொரியன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. லேட்டஸ்ட் 64 பிட் பிராஸசர் அமைக்கும் பணி சாத்தியமில்லை என்றாலும் தரமுள்ள 64 பிட் பிராஸசர் அமையும்படி இந்த மாடல் இருக்கும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளேயின் அளவு குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லையென்றாலும் அடுத்த தலைமுறையினர் விரும்பும் வகையில் IGZO டெக்னாலஜி ஸ்கீரீன் மற்றும் வீடியோ மற்றும் திரைப்படங்களை HD எஃபெக்டில் பார்க்கும்படியான 4கே ரீசொலுசன் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

கேமிரா:

நோக்கியா லூமியா 1020 இருப்பதை விட மிகச்சிறந்த OIS ஆப்டிகல் இமேஜ் ஸ்டபிலேஷன் வசதி கொண்ட 16 எம்பி கேமரா கேலக்ஸி S5 மாடலில் உண்டு.

ரேம்:

அடுத்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் விரும்பும் 3GB DDR3 மெமரி உள்ளடங்கிய 3 ஜிபி ரேம் உள்ளடங்கியது.

ஆபரேட்டிங் சிஸ்டம்:

ஏற்கனவே கடந்த அக்டோபரில் வெளியான ஆண்ட்ராய்டு 4.4 KitKat கேலஸி S5 மாடலில் உள்ளடங்கும் என்றும், இது கூடுதல் ரேம், கூடுதல் Cloud Storage, மற்றும் சிறந்த பேட்டரி செயல்திறன் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியதாக இருக்கும்.

பேட்டரி:

கேலக்ஸி S 4 மாடலில் 2600 mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுபோல இந்த கேலக்ஸி S5 மாடலில் 4000 mAh பேட்டரி உள்ளடங்கியிருக்கும்.

மேலும் இம்முறை சாம்சங் வெளியிடும் கேலக்ஸி S5 மாடலில் இந்தியர்கள் பெரிதும் விரும்பும் எப்.எம் இருக்கும் என்பதை நாம் சொல்ல தேவையில்லை என்றே கருதுகிறோம்.  வரும் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிமுகமாகும் இந்த புதிய மாடல் ஐபோனை இதற்கு முன் இந்நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி S4 மற்றும் நோட் 3ஐ விட இதற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் தகவல்களுக்கு எங்களோடு தொடர்பில் இருக்கவும்.

Web Design by Srilanka Muslims Web Team