உள்நாட்டு வருவாய் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்! - Sri Lanka Muslim

உள்நாட்டு வருவாய் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்!

Contributors

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது.

இந்த மனுக்கள் புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் தொடக்கத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்பித்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல நபர்களினால் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு சவால் விடுத்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் ஊடாக, வரிக்கு உட்பட்ட தனிநபரின் மாத வருமானம் ரூபா 250,000 லிருந்து 100,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கை நியாயமற்றது என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team