உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -  ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை! - Sri Lanka Muslim

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் –  ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Contributors

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

சுயேட்சைக் குழுக்காக ஒரு வேட்பாளருக்காக கட்டுபணமாக ஐயாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி வேட்பாளர் ஒருவருக்காக 1500 ரூபாய் வைப்பீடு செய்யப்பட வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team