ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவித்தல் - Sri Lanka Muslim

ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவித்தல்

Contributors

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலாநிதி அனஸ் அவர்களின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து சமூக மற்றும் ஊடகவியலாளர் நலன்களுக்கான அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்த வரிசையில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும் இதில் உள்வாங்கிக் கொள்வது தொடர்பான கலந்துறையாடல் எதிர்வருகின்ற 9ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பதுள்ளை ஊவா கல்விக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துறையாடலில் உத்தேச அமைப்பின் இடைக்கால நிருவாக சபையின் தலைவர் இர்பான் காதர், இணைச் செயலாளர்களான ஏ.ஆர்.ஏ.பரில்,  எல்.ஏ.யூ.எல்.எம்.நளீர் ஆகியோரும்   அழைப்பாளியான ஏ.ஜீ.எம்.நஜீப் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் அமர்வில் கலந்து கொள்ள விரும்புகின்ற   ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஊடகத்துறையில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுக்கின்றனர். மேலதிக விபரங்களுக்காக ஆசிரியர் எம்.கே.எம்.நியார் அவரின் 0778832333 இலக்கக் கையாடல் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team