எகிப்தில் இராணுவ ஒடுக்குறை உச்சம் பெறுகிறது - Sri Lanka Muslim

எகிப்தில் இராணுவ ஒடுக்குறை உச்சம் பெறுகிறது

Contributors

எகிப்தில் இராணுவ சதிப்புரட்சிக்கு காரணமான  இராணுவ தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அப்தல் பத்தாஹ் அல் சிசியை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்துமாறு  கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட் டுள்ளது.

அஹ்மத் அஸ் அல் அரப் என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு எந்த சட்ட அடிப்படையும் அற்றது என்று அலக்ஸாண்ட்ரிய நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்ஷி  கடந்த ஜுலை 3 இல் பதவி கவிழ்க்கப் பட்ட பின்னர் இராணுவ ஆதரவு அரசினால் முன்னெடுக்கப்படும் ஆட்சி மாற்ற செயற்பாடுகளின் முக்கிய அம்சமாக ஜனாதிபதி தேர்தல் அமையவுள்ளது. தற்போது அரசினால் வரையப்பட்ட அரசியலமைப்பு நகல் மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு எதிர்வரும் ஜனவரி 14-15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அல் சிசியை போட்டியிடக்கோரி எகிப்தில் இராணுவ ஆதரவு பிரசாரங்கள் வலுத்து வருகின்றன. முர்ஷியை வெளியேற்றிய பிரதான நபரே ஜனாதிபதி பொறுப்புக்கு பொறுத்தமானவர் என்று அந்த பிரசாரங்கள் தெரிவித்து வருகின்றனர் .

நாட்டில் முழு அளவில் இஹ்வான்கள் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை இராணுவ ஆதரவு அரசு மேற்கொண்டு வருகிறது , நாட்டில் பரவலாக வகைதொகையற்ற கைதுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் குறிப்பிடுகிறது .

அதேவேளை அல் ஜஸீரா  ஒளிப்பரப்பு சேவையில் பணிபுரியும் மூன்று ஊடகவியலாளர்களை எகிப்து பாதுகாப்பு படை தலைநகர் கெய்ரோவில் வைத்து கைது செய்துள்ளது கெய்ரோ கிளையின் தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் மொஹமத் பதல் பஹ்மி மற்றும் பி. பி. சி. முன்னாள் செய்தியாளர் பீட்டர் கிரெஸ்ட் ஆகியோரும் கைதானோரில் அடங்குகின் றனர்.தடைசெய்யப்பட்ட இஹ்வான்  அமைப்புடன் சட்டவிரோதமான சந்திப்புகளில் இந்த ஊடகவியலாளர்கள் ஈடுபட்டதாக எகிப்து உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர்களது கெமராக்கள், ஒலிப்பதிவு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team