எதிராக பிரசாரம் செய்த சவுதி பெண் விடுதலை - Sri Lanka Muslim

எதிராக பிரசாரம் செய்த சவுதி பெண் விடுதலை

Contributors
author image

Editorial Team

ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சவுதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்தல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, திருமணம் செய்துகொள்ள மற்றும் சிறையில் இருந்து வெளிவர உள்ளிட்ட பல்வேறு அன்றாட செயல்களில் செளதி பெண்கள் ஈடுபடுவதற்கு ஆண்களின் அனுமதி தேவை என்ற முறை செளதியில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது.

பெண் செயற்பாட்டாளாரும் முகநூலில் பலரால் பின்தொடரப்படும் பிரபலமான நபரான அல்-ஒட்டைபி பாதுகாவலர் விதிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். #IAmMyOwnGuardian என்ற ஹேஷ்டேக் மூலமாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மனுக்களில் கையெழுத்திட்டும் அரசர் சல்மானுக்கு கடிதங்கள் அனுப்பியும் வைக்கப்பட்டன.

இந்த ஆண்டின் துவக்கத்தில் சவுதி அரேபியாவின் அரசர் சல்மான் பாதுகாவலர்கள் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த் நிலையில் தனது தந்தையின் வீட்டில் இருந்து தப்பி வந்து தனித்து வாழ முயற்சி செய்ததற்காக அல்-ஒட்டைபி கைது செய்யப்பட்டார்.அல்-ஒட்டைபி தலைநகர் ரியாத்திற்கு தனியாக தப்பிச் சென்றார். ஆனால், அவரது தந்தை பாதுகாவலர்கள் விதிமுறைகளின் கீழ் காவல் துறையிடம் புகாரளித்தார். இதன் பின்னர், ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் வளைகுடாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சவுதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team