வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி சிறந்த நிர்வாகி - றிப்கான் பதியுதீன் - Sri Lanka Muslim

வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி சிறந்த நிர்வாகி – றிப்கான் பதியுதீன்

Contributors

– அபூ அஸ்ஜத் –
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த பிரேரணை ஒன்று தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று இடம் பெற்ற வட மாகாண சபையின் அமர்வின் போது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் சபை முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இன்று இந்த அமர்வு இடம் பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார்.இவர் இம்மாகாண மக்களின் வாழ்வாதார மற்றும்அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை நாம் இந்த சபையில் பாராட்டுகின்றோம்.
எவ்வித இனப்பாகுபாடுகளுமின்றி நேர்மைத்தன்மை மற்றும் வெளிப்படை தன்மையின் மூலம் அவரது சேவை அமைந்துள்ளது.அவருக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த தீர்மாணம் தொடர்பில் இந்த சபையில் நான் அவரது பணியினையினையும் பாராட்ட வேண்டும்.
குறிப்பாக தற்போதைய ஆளுநரை தவிர்த்து எதிர்காலத்தில் ஆளுநராக எவராவது நியமிக்கப்படுவார்களானால் அந்த நியமனம் இரானுவத் தரப்பில் இருந்த ஒருவராக இடம் பெறக் கூடாது என்ற விடயத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது என்பதை தெரிவிப்பதாகவும்,தற்போதைய ஆளுநரின் பணிகள் பாராடடுக்குரியது என்றும் உறுப்பினரும்,எதிர்கட்சி பிரதம கொரடாவுவமான றிப்கான் பதியுதீன் கூறினார்.
இந்த சபையில் சிலர் பதாகைகைளை ஏந்தி காணிப்பிரச்சினை தொடர்பில் அவற்றை சுட்டிக்காடடுகின்றனர்.இந்த காணிப் பகிர்வில் தமிழ் பேசும் தமிழ்,முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களது பிரச்சினைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதே வேளை சபைக்குள் உறுப்பினர்கள் கௌரவமான வசனங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த சபையின் கௌரவத்தை பாதுகாக்க முடியும்.வாக்களித்த எமது மக்களுக்கும் நாங்கள் பணியாற்றவே வந்திருக்கின்றோம்,அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை.இதில் இனபாகுபாடுகள் பார்க்க முடியாது.பார்க்கவும் கூடாது.
அடுத்த ஆண்டின் வடமாகாண அமைச்சுக்களுக்கும்,அமைச்சர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் சரியான விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தாம் இன்றைய உரையின் போது சுட்டிக்காட்டியதாக வடமாகாண சபை உறுப்பினரும்,எதிர்கட்சியின் பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுதீன் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team