எதிர்காலத்துக்காக ஆயத்தமாகிய கவாஸாகி... புதிய பைக் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியத - Sri Lanka Muslim

எதிர்காலத்துக்காக ஆயத்தமாகிய கவாஸாகி… புதிய பைக் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியத

Contributors

– தொகுப்பு றைகான் (News From tds)-

 

எதிர்காலத்துக்கான போக்குவரத்து சாதனங்களை வடிவமைப்பதில் பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கான்செப்ட் அடிப்படையிலான அந்த வாகனங்களின் டிசைன் மிக வித்தியாசமாகவும், வசித்திரமாகவும் இருக்கும்.

அதுபோன்ற ஒரு விசித்திரமான எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டை கவாஸாகி டோக்கியோ ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளது.

 

3 சக்கர வாகனம்

இந்த பைக் கான்செப்ட் 3 சக்கரங்களை கொண்டது. மோட்டார்சைக்கிள் மற்றும் ட்ரைசைக்கிள் ஆகிய இரண்டு ரகங்களின் கலவையாக இதுவடிவமைக்கப்ப்டடுள்ளது.

 

செயல்பாடு

முன்புறத்தில் 2 சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று சக்கரங்களை கொண்டிருந்தாலும், இது 2 வீலர் போன்று செயல்படும் என கவாஸாகி தெரிவிக்கிறது.

கம்ஃபர்ட் ஆப்ஷன்

கம்ஃபர்ட் ஆப்ஷனில் இயங்கும்போது இரண்டு முன்பக்க சக்கரங்களும் சற்று விலகுவதுடன், அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஹேண்டில்பார்கள் மேலே உயர்ந்து பிடித்து ஓட்டுவதற்கு சிறப்பான கிரிப்பையும், சவுகரியத்தையும் தரும் என்று கவாஸாகி கூறுகிறது. இது சாதாரண வேகத்தில் செல்வதற்கான டிரைவிங் ஆப்ஷனாக குறிப்பிடப்பட்டுள்ளது

 

ஸ்போர்ட் ஆப்ஷன்

அதிவேகத்தில் செல்வதற்கு ஸ்போர்ட் என்ற டிரைவிங் ஆப்ஷனில் மாற்றிக் கொள்ளலாம். இப்போது பைக்கின் முன் சக்கரங்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வதுடன், ஹேண்டில்பார் ஓட்டுபவருக்கு மிக அருகாமையில் வந்துவிடும். இதன் மூலம், பைக்கின் புவியீர்ப்பு மைய விசை தாழ்வாக அமையும் என்பதால் சிறப்பான சமநிலையுடன் பைக் செல்லும் என கவாஸாகி கூறியுள்ளது

 


புதிய பேட்டரி

சாதாரணமாக தற்போது லத்தியம் அயான் பேட்டரி மிகவும் உயர்வானதாக கருதி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பைக்கில் புதிய நிக்கல்- மெட்டல் ஹைட்ரேட் என்ற புதிய பேட்டரியை கவாஸாகி பொருத்த உள்ளது. இதுபற்றிய விரிவான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை

தயாரிப்பு

இந்த பைக்கை தயாரிப்பு நிலைக்கு செல்லுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும், இந்த பைக்கின் அடிப்படையில் எதிர்காலத்தில் புதிய பைக்குகளை உருவாக்கும் முயற்சிகளை கவாஸாகி மேற்கொள்ள வாய்ப்புள்ளது

bike

 

bike2

 

bike3

Web Design by Srilanka Muslims Web Team