எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் – அமைச்சர் ஹக்கீம் - Sri Lanka Muslim

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் – அமைச்சர் ஹக்கீம்

Contributors

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் அரசுடனோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சியுடனோ கூட்டணியில் இணைந்து போட்டியிடாது தனித்தே போட்டியிடும் என அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பூகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்து கொண்டு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும்.

இன்றைய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நேர்மையாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுத்தாலும் சில மத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. எந்த இனமும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் அரசியலில் ஈடுபடவும் உரிமைகள் உள்ளன. இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் கட்சியின் கொள்கை மற்றும் யாப்புக்கு இணங்க முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சுயாதீனமாகவே செயற்படும். அதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது என்றார்.(m)

Web Design by Srilanka Muslims Web Team