எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் மக்களுக்கான அபிவிருத்தியை நிறுத்தப் போவதில்லை - Sri Lanka Muslim

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் மக்களுக்கான அபிவிருத்தியை நிறுத்தப் போவதில்லை

Contributors

நாட்டு மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தகைய தேசிய சர்வதேச எதிர்ப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் நிறுத்தப்போவ தில்லை எனத் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்யவே நாம் வெளிநாடுகளில் கடன் பெறுகிறோம். மீள செலுத்த முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என தெரிவித்த ஜனாதிபதி; குற்றஞ் சுமத்துபவர்களன்றி மக்கள் நினைத்தால் மட்டுமே அபிவிருத்தியை நிறுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். சர்வதேசத்துடன் இணைந்து எம்மை தூக்குக் கதிரையில் அமர்த்துவதற்குச் சூழ்ச்சி செல்கின்றவர்களின் குற்றச்சாட்டுக்குப் பயந்து முன்னோக்கிய அபிவிருத்தியை பின்தள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடுவலை நகரில் 1300 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன, ஏ. எச். எம். பெளஸி உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

கடுவலை நகர சபை மக்கள் தேவையை நன்குணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது பெருமைப் படக்கூடியது.

கொழும்பு நகரைப் போன்றே அதனை அண்டிய நகரமான கடுவலையும் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகிறது. மக்களுக்குத் தேவையானதை பெற்றுக் கொடுப்பதில் கடுவலை மாநகர மேயர் புத்ததாச அர்ப்பணிப்புடன் செயற்படுவது மகிழ்ச்சி தருகிறது.

கடுவலை பிரதேசம் அரசியல் ரீதியிலும் மிக முக்கியமானது. 65 வீத வாக்குகளை இங்குள்ள மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றனர். முப்பது வருட யுத்தத்துக்குப் பின்னர் மதங்களுக்கிடையில் சிறந்த நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் மத ரீதியான சகவாழ்வு முன்னேற்றமடைந்து வருகிறது.

கடுவலை ஒரு சிறந்த நகரமாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. தெற்கு அதிவேக பாதைக்கான கொழும்பு பிரவேச வீதி கடுவலையிலேயே அமையவுள்ளது. அதிவேக பாதை வந்ததும் கடுவலை நகரம் மேலும் சிறப்பான நகரமாகத் திகழும்.

இத்தகைய அபிவிருத்திகளுக்கு மத்தியில் நாம் மக்கள் மனங்களையும் அபிவிருத்தி செய்வது அவசியமாகிறது.

நாம் ஒரு பக்கம் மட்டும் சார்ந்து செயற்படுபவர்களல்ல. சிலர் நாம் அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அபிவிருத்தியோடு எமது எதிர்கால சந்ததியான பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றவதே எமது இலக்காகும்.

முன்னெப்போதுமில்லாதவாறு நாம் கல்வித்துறையில் தொழில்நுட்பப் பாடத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இவர்களை எதிர்கால அபிவிருத்தியின் பங்காளர்களாக இணைத்துக்கொள்வதே எமது நோக்கம்.

க்களின் சுபீட்சம் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்ட அபிவிருத்தியை நாம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு மிக அவசியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.thinakaran

Web Design by Srilanka Muslims Web Team