எந்த மாற்றத்தையும் கோட்டாபய அரசாங்கம் கொண்டுவரவில்லை - ஆதரிக்கமாட்டோம்! பகிரங்க அறிவித்தல்..! - Sri Lanka Muslim

எந்த மாற்றத்தையும் கோட்டாபய அரசாங்கம் கொண்டுவரவில்லை – ஆதரிக்கமாட்டோம்! பகிரங்க அறிவித்தல்..!

Contributors
author image

Editorial Team

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Prof.Tissa Vitharana)தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை விட மாற்றத்தை செய்வதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் இதுவரை எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்நறுவை மன்னப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமே தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேவை.

அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளிலும் இணைந்து செயற்பட போவதில்லை. அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் அரசியல்வாதிகள் அவசியமில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படும் என்று கருதியே லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team