எனது கணவரை விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்! ஆதாரத்துடன் மனைவி பரபரப்பு பேட்டி - Sri Lanka Muslim

எனது கணவரை விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்! ஆதாரத்துடன் மனைவி பரபரப்பு பேட்டி

Contributors

பாலஸ்தீனத்தின் முன்னாள் ஜனாதிபதி யாசர் அரபாத் பொலோனியம் என்ற விசம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மருத்துவ தடவியல் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடுத்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் யாசிர் அரபாத் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் விசம் வைத்து கொல்லப்பட்டிருந்தார் என்ற செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இஸ்ரேல் இந்த மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என பாலஸ்தீனர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எனினும் இதனை நிராகரித்துள்ள இஸ்ரேல் அரசாங்கம், வெளியாகியுயுள்ள சுவிட்சர்லாந்தின் மருத்துவ அறிக்கை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் யாசர் அரபாத்தின் மனைவி சுஹா பாரிசில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், எனது கணவர்(யாசர் அராபத்) இயற்கை மரணத்தால் உயிர் இழக்கவில்லை.

அவர் பொலோனியம் என்ற விஷத்தால் கொல்லப்பட்டுள்ளார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

அவரது மரணம் இயற்கையானது அல்ல, அரசியல் படுகொலை தான் என்ற எனது சந்தேகம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலை தொடர்பாக எந்த நாட்டையும் எந்த தனிநபரையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 2004 ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team