என் தலைவரே இறந்து விட்ட பிறகு போர்குற்றம் குறித்து இனியும் பேசிப் பலனில்லை! - விஜயகாந்த். - Sri Lanka Muslim

என் தலைவரே இறந்து விட்ட பிறகு போர்குற்றம் குறித்து இனியும் பேசிப் பலனில்லை! – விஜயகாந்த்.

Contributors

இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் நேற்று காலை, 9:10 மணிக்கு டில்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் விஜயகாந்த் அளித்த பேட்டி: காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்பது குறித்து, இலங்கைத் தூதர் பேசியது சரியல்ல. இந்தியாவை யாரும் தனிமைப்படுத்த முடியாது.

காமன்வெல்த் மாநாட்டில், கனடா பங்கேற்க போவதில்லை என, அறிவித்துள்ளது. ஆனால், அந்நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பிரிட்டன் நாட்டின் பிரதிநிதிகளும், இம்மாநாட்டில் பங்கேற்று, இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். என் தலைவர் பிரபாகரனே இறந்து விட்ட பிறகு, போர் குற்றம் குறித்து இனியும் பேசி பலனில்லை. இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team