எம்.பிக்களின் கனவை சுக்குநூறாக்கிய கோட்டா! - Sri Lanka Muslim

எம்.பிக்களின் கனவை சுக்குநூறாக்கிய கோட்டா!

Contributors

அரசியலமைப்பின் பிரகாரம் 30 இற்கு மேல் அமைச்சுப் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், நேற்று (07) தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். ஆயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team