எரிபொருள் நெருக்கடியால் மின் விநியோகம் பாதிக்கப்படும் சாத்தியம்..! - Sri Lanka Muslim

எரிபொருள் நெருக்கடியால் மின் விநியோகம் பாதிக்கப்படும் சாத்தியம்..!

Contributors

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான டீசல் வழங்கினால் மின்சாரத் தடைகளை ஓரளவு குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்களில் பல மின் பிறப்பாக்கிகள் செயலிழந்துள் ளதால், நேற்று (13) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகா வோட் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையுடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் டீசலை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி எரிபொருள் கிடைக்காவிட்டால் இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team