எரிபொருள் வழங்க புதிய திட்டம் - ஜூலை முதல் வாரத்திலிருந்து அமுல்! - Sri Lanka Muslim

எரிபொருள் வழங்க புதிய திட்டம் – ஜூலை முதல் வாரத்திலிருந்து அமுல்!

Contributors

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்யும் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய முறை 2022 ஜூலை முதல் வாரத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதி நிலைமையை சீரமைக்கும் வரை, 24 மணி நேர மின்சாரம் மற்றும் தடையில்லா எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வரை, வாகன சாரதிகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு உத்தரவாதமான வார ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அமைச்சர் கூறினார்.

தடையில்லா மின்சாரம் மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வரை எரிபொருள் விநியோக மேலாண்மை சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.

நிதிக் கட்டுப்பாடுகளுடன், CPC ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில வாகன சாரதிகள் மற்றும் பிற தனிநபர்கள் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக எரிபொருளை சேகரிக்கின்றனர் அமைச்சர் கூறினார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. ,” என்றும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team