எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் – பிரதமர்..! - Sri Lanka Muslim

எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் – பிரதமர்..!

Contributors
author image

Editorial Team

உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய தேவையான வெளிநாட்டுப் பணத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிலைமை காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ரஷ்யா, ஐரோப்பாவுக்கு எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை கடந்த வாரம் நிறுத்தியது. இங்கிலாந்தில் 30 முதல் 40 வீதமாக எரிபொருள் விலை அதிகரிக்கும்.

இதனால், இவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும். எமக்கு கிடைத்துள்ள 500 மில்லியன் டொலர்களை முடிந்தளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய பயன்படுத்த வேண்டும்.

விலை அதிகரிப்பு என்பது எமது கைகளில் இல்லை. உக்ரைன் யுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team