'எரிவாயு அடுப்புகள் வெடிப்புக்குப் பின்னால் அரசியல் இருகின்றது' - முஜிபுர் ரஹ்மான்! - Sri Lanka Muslim

‘எரிவாயு அடுப்புகள் வெடிப்புக்குப் பின்னால் அரசியல் இருகின்றது’ – முஜிபுர் ரஹ்மான்!

Contributors

பெசில் ராஜபக்ஷவின்  அழுத்தம் காரணமாகவா, லிற்றோ நிறுவனம் வாக்குமூலம் வழங்குவதற்கு சி.ஐ.டிக்கு இதுவரையில் வரவில்லை? என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் முறைப்பாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்துக்கு செல்வோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் லிற்றோ நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடை பதிவு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய அக்கட்சியினர் (05) சி.ஐ.டிக்கு சென்றிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி, லிற்றோ நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டியில், நாம் முறைப்பாடு செய்து ஒரு மாதக்காலமாகிறது. இந்த முறைப்பாட்டுக்கு அமைய லிற்றோ நிறுவனத்திடம் வாக்குமூலத்தை பெற சி.ஐ.டியினர் அழைப்பு விடுத்துள்ளபோதிலும், ஒருமாதமாகியும் அவர்கள் இதுவரையில் வாக்குமூலம் வழங்க சி.ஐ.டிக்கு வரவில்லை என்றார்.

சமையல் எரிவாயு வெடிப்புகளால் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலரின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, பலருக்குக் காயங்களும் ஏற்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறான நிலையில் லிற்றோ நிறுவனம் என்பது நிதி அமைச்சுக்குக் கீழ் உள்ள அரச நிறுவனமாகம். இவ்வாறான நிலையில் வாக்குமூலத்தைக் கூட வழங்குவதற்கு இந்நிறுவனம் வரவில்லை என்றால், சமையல் எரிவாயு அடுப்புகள் வெடிப்புக்குப் பின்னால் நிச்சியமாக அரசியல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team