எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே.. மழை வேண்டி நடத்திய துஆ பிரார்த்தனை முடிந்த 10 நிமிடத்தில் மழை கொட்டி தீர்த்ததால்! - Sri Lanka Muslim

எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே.. மழை வேண்டி நடத்திய துஆ பிரார்த்தனை முடிந்த 10 நிமிடத்தில் மழை கொட்டி தீர்த்ததால்!

Contributors

ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பள்ளி வாசலில் மழை வேண்டி நடத்திய துஆ பிரார்த்தனை முடிந்த 10 நிமிடத்தில் மழை கொட்டி தீர்த்ததால் அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை மிகவும் குறைந்துள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி குடிநீர் தேவையை நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் இஸ்லாமிய சமுதாய மக்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இந்த பிரார்த்தனைக்கு ஜூம்மா பள்ளி வாசல் ஜமாத் தலைவர் ராஜாசா ஹிப் தலைமை வகித்தார்.

இதில், ஜமாத் நிர்வாகி ஜவாஹிருதீன், ஷாஜகான், முஸ்தபா, தாஜூதீன், பஷீர், பாம்பன் ஜமாத் செயலாளர் ரபீக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிவடைந்து 10 நிமிடத்தில் மழை பெய்தது. இது அப்பகுதி மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

தங்கச்சிமடம் பள்ளி வாசலில் காலை 10 மணிக்கு மழை வேண்டிய தொழுகை மற்றும் துஆ பிரார்த்னை தொடங்கியது. 11.30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் மேகம் திடீர் என்று இருண்டது. 11.40 மணிக்கு தங்கச்சிமடம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

train2

 

train1

Web Design by Srilanka Muslims Web Team