ஏனைய கட்சிகள் சாய்ந்தமருதுக்குள் வரக்கூடாது என தடை விதிப்பதற்கு பள்ளிவாயலுக்கு எந்த அதிகாரமும் கிடையாது - முழக்கம் மஜீத் - Sri Lanka Muslim

ஏனைய கட்சிகள் சாய்ந்தமருதுக்குள் வரக்கூடாது என தடை விதிப்பதற்கு பள்ளிவாயலுக்கு எந்த அதிகாரமும் கிடையாது – முழக்கம் மஜீத்

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ


சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை கோறிக்கையினை முன்னிலைப்படுத்தி ஜனநாயக போராட்டமாக வடிவமைக்கப்பட்ட பள்ளிவாயலுடைய தீர்மானமானது இன்று வன்முறை போராட்டமாக மாறி முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான அலையாக மாற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவகம் பத்து அம்சங்களை கொண்ட பிரகடணத்தினை வெளியிட்டிருந்தமை எல்லோரும் அறிந்த விடயமாகும். அந்த பிரகடணத்திலே சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் எந்த கட்சியினையும் சாராத ஒரு சுயேற்ச்சை குழுவினை பிரதேச சபை தேர்தலில் களமிறக்குவது என்றும், எந்த கட்சினுடைய தலமைகளும் சாய்ந்தமருது பிரதேசத்திற்குள் உட்பிரவேசிக்க கூடாது என்ற இரண்டு விடயங்களை முக்கிய விடயமாக கருத வேண்டியுள்ளது.

ஆகவே இந்த பிரகடணமானது முற்று முழுதாக ஜனநாயாத்திற்கு விரோதமான பிரகடணமாகவே பார்க்கப்படுகின்றது. எமது நாடு ஒரு ஜனநாக நாடாகும். சர்வதிகார நாட்டிலே செயற்படுவது போன்று இங்கே செயற்பட முடியாது. எல்லா கட்சிகளும் சாய்ந்தமருது பிரதேசத்திற்குள் வந்து அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை கேட்பதற்கான உரிமை இருக்கின்றது.

ஆகவே ஏனைய கட்சிகள் சாய்ந்தமருதிற்குள் வரக்கூடாது என தடை விதிப்பதற்கு சாய்ந்தமருது பள்ளிவாயலுக்கு எத்தகைய அதிகாரமோ அருகதையும் கிடையாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முழக்கம் மஜீத் என இஸ்தாபக  தலைவர் அஸ்ரப்பினால் செல்லமாக அழைக்கப்பட்ட அல்-ஹாஜ் ஏ.எல்.அப்துல் மஜீதிடம் குறித்த பிரச்சனை சம்பந்தமாக கேட்கப்பட்ட பொழுதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

மேலும்  தனது கருத்தினை தெரிவித்த தவிசாளர் முழக்கம் மஜீத்…. எந்த கட்சிகளையும் சாராதவர்களையே சுயேற்ச்சையாக களமிறக்கவுள்ளோம் என கூறிய பள்ளிவாயல் நிருவாகமானது அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய ஆதரவாளர்களான ஆறு வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளமையானது பதுமையாக உள்ளது. ஆகவே இதை எல்லாம் வைத்து பார்க்கின்ற பொழுது சாய்ந்தமருது இளைஞர்கள் பொதுவாக அறியாமையில் இருக்கின்றார்கள்.

ஏன் நான் இதை கூறுகின்றேன் என்றால்.! சுயேற்சையாக சாய்ந்தமருதில் களமிறக்கப்பட்டுள்ள ஆறு வேட்பாளர்களும் வெற்றி அடைந்து விட்டால்.! அதனால் சாய்ந்தமருதிற்கு பிரதேச சபை கிடைத்து விட்டது என நம்பினால்.? அரசியல் அடிச்சுவடி தெரியாதவர்கள்தான் இந்த போராட்டத்தில் முன்னுக்கு நின்று செயற்படுகின்றார்கள் என்பதே தெளிவான விடயமாக உள்ளது . இந்த போராட்டத்தினை மேற்கொள்கின்றவர்கள் ஜனாதிபதி வரைக்கும் சென்று வந்துள்ளர்கள்.

இபோழுது சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை பெற்றெடுப்பது என்பதற்கு அப்பால் சென்று கல்முனை மாநகர சபையினை ஆட்சி செய்ய துடிக்கின்றார்கள் என்பதே உண்மை. இதனை மேலும் உறுதிபடுத்தும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் கல்குமுனை மாநகர சபையினை கைப்பற்ற போகின்றது என அண்மையில் எங்களுடைய கட்சியிலிருந்து மாற்றுகட்சிக்கு தாவிய நண்பர் ஜவாத் கூறியிருக்கின்றார்.

அகவே திரை மறைவிலே எந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றது எனபதும், அதனுடைய சதித்திட்டம் என்ன என்பதும் எமது இளைஞர்களுக்கு தெரியாத விடயமாக இருக்கின்றது. ஜமீல், அதாவுல்லா போன்றவர்கள் சாய்ந்தமருது விடயத்தில் எந்த அடிப்படையில் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் விளங்கிகொள்ளாத இளைஞர்களாகவே இருக்கின்றார்கள். அவாறு இளைசர்களுடைய கண்கள் கட்டப்பட்டு வெளியில் நடமாட விட்டுள்ளனர்.

முஸ்லிம் கங்கிரசினால் மட்டும்தான் சாய்ந்தமருதிற்கான தனியா பிரதேச சபையினை பெற்றுத்தர முடியும். ஆகவே சிந்தனை செயலுடன் தேர்தலில் செயற்பட்ட வேண்டும் என்பதனை வேத கட்டளைகள் இறங்கியதை போன்றும், பள்ளிவாயல் நிருவாகம் கூறி விட்டது வாக்களிக்க வேண்டாம் என்ற தூண்டுதல் வார்த்தைகளோடு அதனுடைய ஆழம், அகலம், சிந்தனை எதுவும் இல்லாமல் கண்னை கட்டி காட்டில் விட்ட இளைசர்களை போன்றவர்களுக்கு எனது அறிவுரையாக கூறிக்கொள்ள விரும்புவாதாக மேலும் தவிசாளர் முழக்கம் மஜீத் தெரிவித்தார்.

அத்தோடு சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை பிரகடணம், சுயேற்ச்சையாக பள்ளிவாயல் நிருவாக களமிறக்கியுள்ள வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரை சாய்ந்தமருதிற்குள் வரவிடாமல் ஊர் மக்கள் தடுத்தமை, போன்ற விடயங்கள் சம்பந்தமாக முழக்கம் மஜீதிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய விரிவான பதில்ல்கள் டங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team