ஏன் என்னை பழிவாங்குகின்றீர்கள்: ஜனாதிபதியிடம் பாட்டுப்பாடிய மேர்வின்! - Sri Lanka Muslim

ஏன் என்னை பழிவாங்குகின்றீர்கள்: ஜனாதிபதியிடம் பாட்டுப்பாடிய மேர்வின்!

Contributors

பேலியகொடவில் கடந்த 27 ஆம் திகதி முற்பகல் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதை திறப்பதற்கு முன்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிஸ்தர்கள் மத்தியில் எங்கே களனியின் உரிமையாளர் எனக் கூறி ஜனாதிபதி ஒருவரை தேடியதை காணக் கூடியதாக இருந்தது.ஜனாதிபதி அமைச்சர் மேர்வின் சில்வாவை தான் தேடுகிறார் என்பதை புரிந்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு நீண்டநேரம் செல்லவில்லை. அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு மிகவும் பின்னால் அமைச்சர் மேர்வின் சில்வா காணப்பட்டார்.

ஜனாதிபதி தன்னை அழைக்கும் சத்தத்தை கேட்ட அமைச்சர் மேர்வின் சில்வா அங்கிருந்தவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, என்றும் காணாத வகையில் மிகவும் மகிழ்ச்சியான முகமலர்ச்சியுடன் ஜனாதிபதிக்கு அருகில் சென்றார்.அவர் வெறுமனே ஜனாதிபதியிடம் செல்லவில்லை. கூடியிருந்தவர்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தும் பாடலை பாடிக்கொண்டே ஜனாதிபதிக்கு அருகில் சென்றார்.

“தவறு செய்தாலும் மனதால் செய்யவில்லை..
நோகச் செய்யவும் … பழிவாங்கவும் அல்ல….
ஏன் என்னை பழிவாங்கிறீர்கள். எனக்கு புரியவில்லை.
தவறு நேர்ந்திருந்தால் மன்னித்தருள்க.. நீங்கள் என் இரண்டு கண்களை போன்றவர்”   என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாடினார்.

இவ்வாறு பாடிக் கொண்டு ஜனாதிபதியிடம் சென்ற மேர்வின் சில்வாவை ஜனாதிபதி சிறுவனை தடவி கொடுத்து தேற்றுவது போல் ஜனாதிபதி தேற்றினார்.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையை திறந்த ஜனாதிபதி ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஜனாதிபதியின் பாரியார் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்ததுடன் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்ல ஜனாதிபதி மேர்வின் சில்வாவை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.-TC.TW

Web Design by Srilanka Muslims Web Team