ஏமாற்றிய சச்சின்: 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் - Sri Lanka Muslim

ஏமாற்றிய சச்சின்: 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்

Contributors

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சச்சின் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 234 ஓட்டங்கள் எடுத்தது.

முதல்நாள் ஆட்டநேர இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 16 ஓட்டங்களுடனும், தவான் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷிகர் தவான்(23) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்(26) ஷில்லிங்போர்டு “சுழலில்’ சிக்கினார்.

தொடர்ந்து 199வது டெஸ்டில் களமிறங்கிய சச்சின்(10) ஏமாற்றினார். புஜாரா(17), கோஹ்லி(3) நிலைக்கவில்லை.

இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team