ஏறாவூர் பிர்தௌஸ் பிணையில் விடுதலை! - Sri Lanka Muslim
Contributors

ஏறாவூரில் நடாத்தப்பட்ட மக்கள் எழுச்சியின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களாக ஏறாவூரை சேர்ந்த பல பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் நீதிமன்றம் முன் சட்டத்தரணிகளான ஹபீப் றிபான், அச்சலா செனவிரத்ன மற்றும் றியாஸ் ஆகியோருடன் முன்னிலையான ஏறாவூர் அப்துல் மஜீத் முகமட் பிர்தௌஸ் என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கு இன்று ஏறாவூர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை தொடர்ந்து, பிர்தௌஸ் 5 லட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று இந்த வழக்கில் சட்டத்தரணி ஹபீப் றிபானுடன் இணைந்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான பிரேம்நாத், அச்சலா செனவிரத்ன, றியாஸ் மற்றும் நபீஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ஏறாவூர் பொலிஸார் ,ஏறாவூரில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக பிர்தௌஸை ஒரு சந்தேக நபராக இணைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், பிர்தௌஸைப் பற்றி அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் பாராளுமன்றத்தில் “காடையன்” என பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team