ஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன? (முழு விபரம் - Photo) - Sri Lanka Muslim

ஏழைகளின் உம்ரா வீசாக்களுக்கு நடந்தது என்ன? (முழு விபரம் – Photo)

Contributors
author image

ஊடுருவி

சவுதி அரசாங்கத்தினால் இலங்கையில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் இலவச உம்ரா வீசாக்களில் ஒரு சில செல்வந்தர்களும், பணம் படைத்த அரசியல்வாதிகளும் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற சென்றிருப்பது சவுதி அரசாங்கத்திற்கு மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும்; பெரும் ஆத்திரத்தையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

 
சவுதி மன்னர் வருடம் தோறும் வறிய நாடுகளைச் சேர்ந்த வறிய முஸ்லிம்களுக்கு என இலவச உம்ரா மற்றும் ஹஜ் வீசாக்களை வழங்கி வருகின்றார்.

 
இது முழுக்கமுழுக்க உம்ராக் கடமையையும் ஹஜ் கடமையையும் நிறைவேற்ற வசதியற்றவர்களுக்காகவே மன்னரால் வழங்கப்படுவதாகும்.

 
அந்த வகையில் இந்த வருடம் சவுதி மன்னரால் இலங்கை உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 07 நாடுகளுக்கு தலா 40 இலவச உம்ரா வீசாக்கள் வீதம் 07 நாடுகளுக்கு 280 வீசாக்களை வழங்கியிருந்தார்.

 
இலங்கைக்கு வழங்கப்பட்ட 40 வீசாக்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு 10 வீசாக்களும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனுக்கு 10 வீசாக்கள், சவுதி தூதரகத்துடன் நெருக்கத்தை கொண்ட உலமா ஒருவரின் தலைமையைக் கொண்ட நிதாஉல் கைர் நிறுவனத்திற்கு 10 வீசாக்கள் என்றும் மீதி 10 வீசாக்களை இலங்கையில் உள்ள சவுதித் தூதுவர் எடுத்துள்ளார்.

 
எனினும் நிதாஉல் கைல் நிறுவனம் தமக்கு வழங்கப்பட்ட 10 உம்ரா வீசாக்களுக்கு 07 பேரை மாத்திரமே சிபாரிசு செய்தது.

 
அமைச்சர் ரிசாதுக்கு வழங்கப்பட்ட 10 வீசாக்களில் அவர் 09 பேரை மாத்திரம் சிபாரிசு செய்துள்ளார்.
முகா தலைவருக்கு வழங்கப்பட்ட 10 வீசாக்களில் 05 பேரை மாத்திரமே சிபாரிசு செய்துள்ளார்.

 
இதனால் மேற்படி 03 தரப்பினரிடமிருந்து எஞ்சிய 10 வீசாக்களை தூதுவர் தன் கையகப்படுத்தி ஏற்கனவே தூதுவர் பெற்றுக்கொண்ட 10 வீசாக்களுடன் மொத்தமாக 20 வீசாக்களையும் தனக்கு தெரிந்த நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

 
அதன்படி அக்பர் சகோதரர்கள் எனும் நிறுவனத்திற்கு 05 வீசாக்களும்
டொக்டர் ஹாறூன் எனும் வசதிபடைத்த ஒரு தொழிலதிபருக்கு 04 வீசாக்களும்
இலங்கையில் உள்ள கட்டார் தூதரகத்தில் உயர் பதவியில் பணியாற்றும் 04 பேருக்கு வழங்கப்பபட்டதுடன் மேலும் 07 பேருக்கு என தனது 20 வீசாக்களையும் பகிர்ந்தளித்துள்ளார்.

 
இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு என கிடைக்கப்பெற்ற இலவச 40 வீசாக்களில் 33 பேர் மாத்திரமே புனித உம்ரா கடமையை நிறைவேற்ற இந்த வருடம் சென்றுள்ளனர்.

 
ஏனைய மீதி 07 பேரும் தவிர்க்க முடியாத காரணங்களால் உம்ரா கடமையை நிறைற்ற சவுதி செல்லவில்லை. (குறித்த அந்த 07 பேரும் செல்வந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

 
நிதாஉல் கைர் , அமைச்சர்களான ரிசாத் , ஹக்கீமால் பரிந்துரைக்கப்பட்ட 20 பேர்களிலும் 15 பேர் மட்டுமே வசதி குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மிகுதியான 05 பேரும்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட செல்வந்த அரசியல் வாதிகளாகும்.

 
முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களான புத்தளம் நியாஸ் , திருகோணமலை அன்வர், நிந்தவூர் ஆரிப் சம்சுடீன் மற்றும் அனுராதபுரத்தை சேர்ந்த ஜவஹர்சா ஆகியோர இவர்களாவர்.

 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் 05 ஆவது நபராக பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபை உறுப்பினரான காத்தான்குடி சிப்லி பாறுக்கின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக அவரால் உம்ரா கடமையை நிறைவேற்ற இறுதி நேரத்தில்செல்ல முடியவில்லை.(வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம் பேசும் சிப்லி பாறுக்கும் ஏழைகளின் விசாவில் உம்ரா செல்ல முயற்சித்தமை கவலையளிக்கின்றது.) ஆக ரவூப் ஹக்கீம் தனக்கு கிடைத்த 10 வீசாக்களில் 04 பேர்களை மாத்திரமே உம்ரா அனுப்பிவைத்துள்ளார்.

 
இந்த கட்டத்தில் முகா தலைவருக்கு மேற்படி 10 வீசாக்களும் கிடைக்கப்பெற்ற போது அவற்றை யாருக்கு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஒரு சில முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

 

அப்போது அங்கு பிரசன்னமாயிருந்த இந்த மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கலான சிலர் எமக்கே அந்த வீசாக்களை வழங்க வேண்;டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 
இது ஏழைகளுக்கான சவுதி மன்னரால் வழங்கப்பட்ட வீசா – அது உண்மையாக அவர்களுக்கே போய்ச்சேர வேண்டும் ;என இதன்போது ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பதிலளித்த போதிலும் இவர்களோ முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான நிலைப்பாட்டுக் கருத்துக்களை வெளிப்படுத்தி ஹக்கீமை சங்கடத்திற்கு உள்ளாக்க முயற்சித்த போதுதான்; இவர்களையே உம்ராவுக்கு அனுப்பி வைப்பதற்கான முடிவுக்கு வந்துள்ளார் என முகா தரப்பு தகவல்களிலிருந்து எமது இணையத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

 
இதன் பின்னர் புனித உம்ராக் கடமையை நிறைவேற்ற இவர்கள் சவுதி சென்றுவிட்டனர்.

 

 

புனித உம்ராக் கடமையை நிறைவேற்றிய இந்த 04 அரசியல் வாதிகளும் மறுநிமிடமே தத்தமது கைகளில் ஒரு பைல்களை தூக்கிக் கொண்டுள்ளனர்.

 
அந்த பைல்கள் என்னவென்றால் சவுதி அரச அதிகாரிகள் மற்றும் சவுதி தனவந்தர்களிடம் நிதி உதவியை பெற்றுக் கொள்ளும் செயற்திட்ட அறிக்கை பைல்களாகும்.(Project Proposal)
இலங்கையிலும் இந்த மாகாண சபை உறுப்பினர்கள் பிரதிநித்துவப் படுத்தும் பகுதிகளிலும் இதுவரை அறியப்படாத பெயர்களில் அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் இந்த நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள அந்த 04 அரசியல்வாதிகளும் முயற்சித்துள்ளனர்.

 
சவுதி வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஓர் இருவரை சந்தித்து தமது நிதி உதவியையும் கோரியுள்ளனர்.

 
இலங்கையிலிருந்து சென்ற இந்த குழுவினர்க்காக நியமிக்கப்பட்ட மொழிபெயர்பாளர் ஒருவருக்கு தம்மால் முடிந்த நிதி உதவிகளை மறைமுகமாக செய்து ஏனையோருக்கு தெரியாமல் இந்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை இந்த நால்வரும் சந்தித்துள்ளனர்.

 
12 நாட்கள் தங்கியிருந்த இவர்கள் 04 தடவைகளுக்கு மேல் இந்த போலி பைல்களுடன் சவுதி வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை சந்தித்துள்ளதாகவும் சவுதியில் இவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட்ட இவர்களுடனேயே நாடும் திரும்பிய அந்த நபர் எமது இணையத்திற்கு பிரத்தியேகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

 
இந்த செயற்திட்ட பைல்களுடன் வெளிவிவகார அதிகாரிகளை சந்தித்த புகைப்படம் நான்கு அரசியல் வாதிகளின் முக நூல்களில் வெளிவந்தது.

 
ஆனால் அந்த புகைப்படத்திற்கு இவர்கள் வழங்கிய விளக்கமோ மியன்மார் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக பேச்சு நடத்தியது என்பதாகும். ஆனால் மியன்மார் முஸ்லிம்கள் பற்றியோ இலங்கை முஸ்லிம்கள் பற்றியோ எந்தவொரு வார்த்தையேனும் இவர்கள் அங்கு உச்சரிக்க வில்லை என இவர்களுக்கு மொழி பெயர்பாளராக செயற்பட்ட அந்த நபர் ஏனையவர்களிடம் கூறி ஆதங்கப்பட்டும் உள்ளார்.

 
அத்துடன்; சவுதி தணவந்தர்கள் பலரையும் இவர்கள் அதே போலி பைல்களுடன் மற்றுமொரு சந்திப்புக்கiளும் மேற்கொண்டுமுள்ளனர்.

 
இவ்வாறு உம்ரா கடமைய நிறைவேற்றச் சென்று நிதிஉதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த இவர்கள் – சவுதி தனவந்தர்களால் வழங்கப்பட்ட பெறுமதி மிக்க லெதர் பேக்குடனும் மக்கா இமாம் வழங்கிய பெறுமதி மிக்க நியாபகச் சின்னத்துடனும் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவர்கள் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 
உம்ரா கடமையை நிறைவேற்றச் சென்ற அந்த 12 நாட்களும் இந்த நான்கு அரசியல் வாதிகளும் எந்தவiகியிலேனும் சவுதி தனவந்தர்களிடமிருந்து பெரும் உதவயை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அங்கலாய்ப்பிலேயே அலைந்து திருந்ததாக இவர்களுடன் நாடு திரும்பிய பலர் எமது இணையத்திற்கு சுட்டிக்hட்டினர்..

 
எனினும் இவர்கள் பெரும் தொகையான நிதி உதவி இல்லாவிடினும் குறும் தொகையான நிதியையாவது ஏழை மக்களுக்கு என கூறி பெற்றுக்கொள்ளாமல் நாடு திரும்பியிருக்கமாட்டார்கள் என்றும் அந்த நபர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

 

 

இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட 10 வீசாக்களில் 05 செல்வந்த அரசியல் வாதிகளை மட்டுமே சிபாருசு செய்துள்ளார். அது அவர்களது அச்சுறுத்தல்களுக்கு பணிந்துதான் செய்தார் என்றால் மீதி 05 வீசாக்களுக்கும் ஏன் ஹக்கீமால் ; ஏழை எளியவர்களுக்கு பரிந்துரைக்க முடியாமல் போனது என்பதுதான் முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.

 

ஹக்கீமின் இச்செயற்பாடு குறித்து இலங்கையில் உள்ள சவுதித் தூதுவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதுடன் இனிவரும் காலங்களில் ஹக்கீமுக்கு வீசாக்கள் வழங்கும் போது அதிகளவான வீசாக்களை வழங்க வேண்டாம் என சவுதி தூதரக உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் தூதரக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

 
இதே வேளை அமைச்சர் ரிசாதுக்கு வழங்கப்பட்ட 10 வீசாக்களில் – வீசாவின் உண்மை நோக்கத்தை அறிந்தவராக 09 வசதி குறைந்தவர்களை அனுப்பி வைத்துள்ளதுடன் அந்த 09 பேரினதும் தனிப்பட்ட செலவுக்காக பணமும் வழங்கியிமுள்ளார் என அறியமுடிகின்றது.

 
ஆனாலும் அமைச்சர் ரிசாத் தனக்கு கிடைத்த 10 வீசாக்களில் மிகுதி ஒன்றை இன்னுமொரு வசதி குறைந்தவருக்கு வழங்கியிருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

 
எனவே இறுதியாக இவ்வாறு முறைகேடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின்  அரசியல் வாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் கோட்டா வழங்குவதை விடுத்து சவுதித் தூதரகம் இந்த விடயத்தில் நேரடியாக களமிறங்கி ஏழை எளியவர்களை கண்டறிந்து அவர்களை இந்த இலவச உம்ராக்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.

anwar

 


 

 

22221_10206411913406277_6838731267989283933_n 1506639_10206411913486279_3969742921416018611_n 10390986_10206413343322024_3620774188108491820_n 10406880_10206439189408160_5230824316305566646_n 10423258_10206411914206297_4627085361723470634_n 10501794_10206439211248706_2864466236685602909_n 11049476_10206399352972274_4263059689399454352_n 11107729_10206439222328983_8467647528774607652_n 11109721_10206398408988675_1588432023238211797_n 11119108_10206439222408985_5352570808867666696_n 11119115_10206398408908673_527905116364312409_n 11150781_10206444170892694_2545817421810995721_n 11222483_10206413343242022_791791571978172057_n 11223504_10206398408948674_3967230141100939162_n 11224328_10206439189528163_4854252658023200484_n 11229414_10206439222488987_6303356813944795508_n 11258782_10206398408868672_153988860595605448_n 11261500_10206411913526280_6752131263898950623_n 11261513_10206439211808720_601829588807145685_n 11295674_10206439211848721_4631680859565699692_n 11350646_10206439211728718_2867867784257489134_n 11351216_10206439222968999_729554774064214675_n 11351344_10206439211088702_8155049332791343081_n 11351344_10206439211888722_1737590414829812061_n sl

Web Design by Srilanka Muslims Web Team