ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - Sri Lanka Muslim

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரவீந்திரன் கிருஸ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தைத் தொடர்ந்து வாகனத்தில் குறித்த பிரஜையை மோதிக் கொன்றதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இன்று காலை சார்ஜாவில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.துப்பாக்கியினால் சுட்டு குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்கி தண்டனையைக் குறைத்துக் கொள்ள ரவீந்திரனின் குடும்பத்தினர் முயற்சித்த போதிலும், கொலையுண்டவரின் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team