ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் - நாடாளுமன்றத்தில் கட்சி குற்றச்சாட்டு..! - Sri Lanka Muslim

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் – நாடாளுமன்றத்தில் கட்சி குற்றச்சாட்டு..!

Contributors
author image

Editorial Team

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் தாக்கி கொலை செய்ததாக கூறி, பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் தடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவே பொறுப்பு என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பனாமுரே பொலிஸ் நிலையத்திற்குள் சந்தேக நபரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர் வீரசேகர, சந்தேகநபர் பொலிஸ் அறைக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னை தாக்கியதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான அவர், நேற்று இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் அவரது கைதுக்கும் தொடர்பில்லை எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team