ஐரோப்பாவில் மஸ்ஜித்துகளாக மாறிவரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் - Sri Lanka Muslim

ஐரோப்பாவில் மஸ்ஜித்துகளாக மாறிவரும் கிறிஸ்தவ தேவாலயங்கள்

Contributors

மேற்கு நாடுகளில்  கிறிஸ்தவ தேவாலயங்கள்  பல மக்கள் அங்கு செல்லாமையால் மூடப்பட்ட நிலையில்  பல கத்தோலிக்க தேவாலயங்கள்   விற்பனைக்கு விடப்பட்டநிலையில் முஸ்லிம்கள் அவற்றை வாங்கி-Videos  மஸ்ஜித்துக்களாக மாற்றும் நிலை பல இடம்களிலும் இடம்பெற்று வருகிறது .

இந்த தொடரில் அண்மையில் பிரிட்டனின் ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தையும்  முஸ்லிம்கள் வாங்கியுள்ளனர். தேவாலயம் மூடப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் அதனை வாங்கியதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் பணம் கிறிஸ்தவர்களின் நன்மைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினர் அதிக விலை கோரியிருப்பதாக தேவாலயத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்  . கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரிட்டனில் 15 வீதமானோர் மாத்திரமே குறைந்தது மாதம் ஒன்றுக்கு ஒரு முறையாவது தேவாலயத்திற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. ஏனைய கணக்கெடுப்பில் ஐரோப்பாவிலேயே மிகக் குறைவானோர் தேவாலயத்திற்கு செல்வது பிரிட்டனில் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளை ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம் உள்ளமை ஆய்வுகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team