ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி - Sri Lanka Muslim

ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி

Contributors

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud.

இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.

முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.

வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.

அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!

தகவல். கான் பாகவி.

Web Design by Srilanka Muslims Web Team