ஐரோப்பிய அருங்காட்சியகத்தில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் (புகைப்படம் இணைப்பு) - Sri Lanka Muslim

ஐரோப்பிய அருங்காட்சியகத்தில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் (புகைப்படம் இணைப்பு)

Contributors

பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உலகிலேயே மிகப் பெரிய இரு திருக்குர்ஆன் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இப்பிரதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்த இருபெரும் பிரதிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. மற்றொன்று மங்கோலியாவின் (தாதரிஸ்தான்) பழைமையான பிரதி. இது 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய அருங்காட்சியகங்களை இப்பிரதிகள் அலங்கரிக்க உள்ளன.

 

 

ஐந்து மாதங்கள்வரை கண்காட்சியில் நீடிக்கவுள்ள இப்பரதிகளை இலட்சக்கணக்கான ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் ஆப்கன் பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 218 பக்கங்களைக் கொண்ட இப்பிரதி, 3 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இப்பிரதி ஷைகு மன்சூர் நாதிரீ அவர்களால் எழுதப்பட்டது.

 

 

மங்கோலியா பிரதி, உலகிலேயே இரண்டாவது பெரிய திருக்குர்ஆன் பிரதியாகக் கருதப்படுகிறது. இது, மங்கோலியா தலைநகர் உலன்பதோர் (காஸான்) பள்ளிவாசல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது விலையுயர்ந்த குர்ஆன் பிரதி என்கின்றனர். விலை உயர்ந்த கற்களால் இப்பிரதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் ஒன்றரை மீட்டரும் அகலம் இரண்ட மீட்டரும் கொண்டது. 632 பக்கங்கள் கொண்ட இப்பிரதியின் எடை, 800 கி.கி. ஆகும். இப்பிரதி பொன், வெள்ளி ஆகியவற்றால் முலாம் பூசப்பட்டுள்ளது.

 

670F6E273C000005781000_964x594-vikazankoranphotos-11afghanistan-biggest-qurankuran-2

Web Design by Srilanka Muslims Web Team